BREAKING NEWS
Loading latest updates...

அம்மா அம்மாதான்!" - விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' டீசர் வெளியீடு!

Nooru Sami Official Teaser Vijay Antony CineTrendzTamil

Image Credits: Think Music India & Vijay Antony Film Corporation

"அம்மா அம்மாதான்!" - விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' டீசர் வெளியீடு! 'பிச்சைக்காரன்' இயக்குநர் சசியின் அடுத்த மாஸ்டர்பீஸ்!

"உலகே எதிர்த்தாலும்.. சொந்தம் எல்லாம் தடுத்தாலும்.. துணையாய் இருப்பவள் தாய்!"

வணக்கம் CineTrendzTamil வாசகர்களே! 'பிச்சைக்காரன்' போன்ற ஒரு மெகா ஹிட் படத்தைக் கொடுத்த விஜய் ஆண்டனி - இயக்குநர் சசி கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நூறு சாமி' (Nooru Sami) படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மிரட்டும் கிராமத்து பின்னணி!

டீசரின் ஆரம்பமே ஒரு கிராமத்துப் பின்னணியில் மிகவும் அழுத்தமான வசனங்களுடன் தொடங்குகிறது. "நம்ம சாதியைக் காப்பாத்துறதே பொண்ணுங்களை வச்சுதான்.. அவங்களை அடக்கி வச்சுதான் சாதிச் சனத்தை காப்பாத்த வேண்டியதா இருக்கு" என்ற வசனம் படத்தின் ஆழமான கதைக்களத்தைப் புரிய வைக்கிறது. ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை விட, சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதே படத்தின் மையக்கருவாகத் தெரிகிறது.

"இவளெல்லாம் ஒரு அம்மாவா?" எனக் கிராமத்தினர் கேலி செய்யும் இடங்களாகட்டும், ஒரு பெண்ணின் மானத்தைப் பற்றிப் பேசும் இடங்களாகட்டும், இயக்குநர் சசி தனது வழக்கமான பாணியில் எதார்த்தத்தைச் செதுக்கியுள்ளார்.

நூறு சாமி - அதிகாரப்பூர்வ டீசர் 🎬

நட்சத்திரப் பட்டாளம்!

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் பாலஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் போன்ற அனுபவமிக்க நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் களம் இறங்கியுள்ளனர். "உலகே எதிர்த்தாலும் சொந்தம் எல்லா தடுத்தாலும் துணையான நமக்கே இருப்பா.. அம்மா அம்மாதான்" என்ற விஜய் ஆண்டனியின் உருக்கமான வரிகள் டீசரின் ஹைலைட்.

⭐ நூறு சாமி (Nooru Sami) - முழு விபரங்கள்:


இயக்குநர்:சசி
நாயகன்:விஜய் ஆண்டனி
இசை:பாலாஜி ஸ்ரீராம்
தயாரிப்பு:மீரா விஜய் ஆண்டனி (விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்)
நடிப்பு:சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், கருணாஸ்

'பிச்சைக்காரன்' மேஜிக் மீண்டும் திரையில் நிகழும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!

சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம CineTrendzTamil இணையதளத்தை எப்போதும் ஃபாலோ பண்ணுங்க! ❤️🙏

Post a Comment

0 Comments