BREAKING NEWS
Loading latest updates...

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ட்ரைலர்: பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அதிரடி காதல் கலாட்டா!

Love Insurance Kompany LIK Trailer Pradeep Ranganathan CineTrendzTamil

Image Credits: Sony Music South & Seven Screen Studio

"என் ஆப் ஒரு கடவுள் மாதிரி!" - வெளியானது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ட்ரைலர்! அனிருத் இசையில் அதிரடி காம்போ!

"சாதி, ஜாதகம் பார்த்து பிரிஞ்சதெல்லாம் பழைய காலம்.. இப்போ ஆப் பார்த்து பிரியுறீங்களா?"

வணக்கம் CineTrendzTamil வாசகர்களே! 'லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு இளைஞர்களின் ஃபேவரைட் நாயகனாக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பெயருக்கேற்றார் போல மிகவும் கலர்புல்லாகவும், அதே சமயம் இன்றைய டெக்னாலஜி உலகைக் கலாய்க்கும் விதமாகவும் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.

கதைக்களம்: ஆப் சொல்லும் காதல் தீர்ப்பு!

இன்றைய உலகில் எல்லாவற்றுக்கும் இன்சூரன்ஸ் இருக்கும்போது காதலுக்கு ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வியுடன் தொடங்குகிறது ட்ரைலர். ஒரு ஜோடி சேரலாமா வேண்டாமா என்பதை ஒரு 'ஆப்' (App) தீர்மானித்தால் எப்படியிருக்கும்? அதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த ஆப்-பின் பின்னணியில் எஸ்.ஜே. சூர்யா தனது வழக்கமான மிரட்டலான மற்றும் ஜாலியான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

நாயகன் 'வைப் வாசு' (Vibe Vasu) ஆக பிரதீப் ரங்கநாதனும், செல்போன் மற்றும் சோசியல் மீடியாவுக்கு அடிமையான 'தீமா' (Dheema) ஆக கிருத்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையே இந்த ஆப் எப்படி விளையாடுகிறது, இவர்கள் பிரிந்தார்களா அல்லது இணைந்தார்களா என்பதே படத்தின் கருவாகத் தெரிகிறது.

LIK - அதிகாரப்பூர்வ ட்ரைலர் 🎬

மிரட்டும் நட்சத்திரக் கூட்டணி!

இப்படத்தில் யோகி பாபு 'ஜாலி பிரபு' கதாபாத்திரத்தில் ஜாலியாக மிரட்டுகிறார். மேலும் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து, "ஆப்-பை வைத்து பிரேக்-அப் பண்ண புது வழி கண்டுபிடிக்கிறீங்களா?" எனக் கேட்கும் வசனம் இன்றைய காலக்கட்டத்திற்கு மிகச் சரியான சாட்டை அடி. அனிருத்தின் அதிரடியான இசை மற்றும் ரவி வர்மனின் அட்டகாசமான ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம்.

⭐ LIK - முழு விபரங்கள்:


இயக்குநர்:விக்னேஷ் சிவன்
நாயகன்:பிரதீப் ரங்கநாதன்
நடிப்பு:எஸ்.ஜே. சூர்யா, கிருத்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரி கிஷான்
இசை:அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பு:நயன்தாரா & எஸ்.எஸ். லலித் குமார்

"மனித இதயத்தால் என்ன செய்ய முடியுமோ அதை எந்த ஆப்-பாலும் செய்ய முடியாது" - எமோஷனல் மற்றும் ஜாலியான காதலை எதிர்பார்க்கலாம்!

சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம CineTrendzTamil இணையதளத்தை எப்போதும் ஃபாலோ பண்ணுங்க! ❤️🙏

Post a Comment

0 Comments