BREAKING NEWS
Loading latest updates...

விஜய்: “விஜய்யை ஏன் தொட்டோம் னு feel பண்ணுவீங்க! இனி Blast தாங்க!” – திமுக மீது கடும் விமர்சனம்

விஜய்: “விஜய்யை ஏன் தொட்டோம் னு feel பண்ணுவீங்க! இனி Blast தாங்க!” – திமுக மீது கடும் விமர்சனம்

Tvk vijay speech




காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு, தனது பேச்சின் மூலம் அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளார். குறிப்பாக, தி.மு.க அரசை நேரடியாக குறிவைத்து அவர் கூறிய கருத்துகள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.


தி.மு.க மீது விஜய் நேரடி தாக்கு


விழாவில் பேசிய விஜய்,

“இந்த விஜய்யை ஏன் தொட்டோம்… அவருடன் இருக்கும் மக்களை ஏன் தொட்டோம் னு ஃபீல் பண்ணுவீங்க”

என்ற கூற்றின் மூலம் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்தார்.


பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்படுவதை இனி அமைதியாகப் பார்க்கப் போவதில்லை என்றும், ஆட்சியில் இருப்பவர்கள் நடித்து காட்டும் செயல்களையும் மக்கள் கண்டிப்பாக கேள்வி கேட்பார்கள் என்றும் அவர் கூறினார்.


பாலாறு நதியை சுட்டிக்காட்டிய விஜய்


பாலாறு இந்த மண்ணின் உயிர் நதி என விலக்கி விளக்கிய விஜய்,

இந்த நதிக்காக ஆட்சியில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் கேள்வி எழுப்பினார்.


எம்ஜிஆரின் வசனத்தால் அரசியல் சுடர்


மர்மயோகி படத்தில் எம்ஜிஆர் நடித்த “குறி வைத்தால் தவற மாட்டேன்” என்ற வசனத்தை எடுத்துரைத்த அவர்,

இதன் பின்னணி “புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள்” என்றார்.

Vijay speech




தற்குறி அல்ல… மாற்றத்திற்கான அறிகுறி


சிலர் மக்களை “தற்குறி” என கூறுவதை விமர்சித்த விஜய்,

“அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சரியக்குறிகள்! மாற்றத்திற்கான signaling!”

என்ற கூற்றின் மூலம் கூட்டத்திலிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


Thalapathy vijay




விஜய் பட்டியலிட்ட முக்கிய வாக்குறுதிகள்


அவர் அறிவித்த முக்கிய அம்சங்கள்:


வீடு தோறும் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் வாங்கும் நிலை உருவாக்கப்படும்


நாட்டின் பொருளாதாரம் மேம்பட செய்யப்படும்


ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு


வீடு தோறும் ஒரு பட்டதாரி


சட்டம் ஒழுங்கு வலுவாக இருக்கும்


அரசு மருத்துவமனைக்கு மக்கள் அச்சமின்றி செல்லும் நிலை


வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம்


தொழில் வளர்ச்சியில் அதிக கவனம்


இவை அனைத்திற்கான முழு விவரம் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும்



பரந்தூர் விவகாரம் – விமர்சகர்கள் எழுப்பும் கேள்வி


அதே நேரத்தில், சில அரசியல் ஆர்வலர்கள் விஜய்யின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்புகின்றனர். ஜனவரியில் பரந்தூருக்கு விஜய் சென்றதைத் தவிர, அதன் பிறகு விவசாயிகள் பிரச்சனையில் அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பதையும், இப்போது நிலம் கையகப்படுத்தல் பணம் வழங்கப்படும் நிலையில் அவர் எப்படித் விவசாயிகளுடன் நிற்கிறார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இந்த உரை, தமிழக அரசியல் சூழலில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகள்,வரவிருக்கும் அரசியல் சூழலில் முக்கிய திருப்பங்களை உருவாக்கும் என்பது உறுதி.




Post a Comment

0 Comments