BREAKING NEWS
Loading latest updates...

கெணத்த காணோம் விமர்சனம்: கிணறு கிடைக்குமா? இல்ல அரசாங்க சொத்தா? யோகிபாபுவின் மாஸ் காமெடி வேட்டை! 🎬 கிணறு எங்கே?

யோகிபாபுவின் 'கெணத்த காணோம்' சிரிப்பு வேட்டையா? இல்ல அரசாங்கத்தோட மோதலா? முழு விமர்சனம்! 🎬🍿

'கிடாயின் கருணைமனு' என்ற மிகச்சிறந்த படத்தை தமிழ் மக்களுக்கு கொடுத்து பெரிய சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர் சுரேஷ் சங்கையா சீக்கிரமே இயற்கை எய்தியது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு. அவரின் கடைசி படமான கெணத்த காணோம் யோகிபாபு நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்

தண்ணீரே இல்லாத ஒரு ஊர். மழை பெய்ய வேண்டும் என வேண்டி, மக்கள் ஒப்பாரி வைக்கும் அளவிற்கு வறட்சி நிலவும் அந்த கிராமத்தில் யோகிபாபு பூசாரியாக உள்ளார்.

அவருக்கு வயது ஆனாலும் திருமணம் ஆகவில்லை. யோகிபாபு, நாயகி லவ்லினை காதலிக்கிறார். ஆனால், லவ்லினின் அப்பாவோ "தண்ணீர் இருக்கும் ஊரில் தான் என் பெண்ணைக் கட்டி கொடுப்பேன்" என கறாராகச் சொல்கிறார்.

இதனால் யோகிபாபு திருமணம் நடக்காமல் தள்ளிப்போக, பிறகு ஊரில் நீரோட்டம் பார்க்கும்போது, யோகிபாபு வீட்டில் தண்ணீர் இருப்பதாக நீரோட்டம் பார்ப்பவர் சொல்கிறார்.

தனக்கும் திருமணம் நடக்க வேண்டும், ஊருக்கும் தண்ணீர் வேண்டும் என யோகிபாபு தன் வீட்டு நிலத்தில் கிணறு வெட்ட அனுமதிக்க, அந்த கிணற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பு, வேறு ஒன்று வருகிறது. அதன் பின் என்ன ஆனது? ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? யோகிபாபுவிற்கு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

⭐ படத்தோட ஹைலைட்ஸ் & சொதப்பல்ஸ்:


  • கான்செப்ட்: தண்ணீர் பிரச்சனைக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் இடையேயான காமெடி மோதல் செம!
  • நேட்டிவிட்டி: அப்படியே நம் கண்முன் ஒரு கிராமத்தை கொண்டு வந்துள்ளனர்.
  • இரண்டாம் பாதி: எமோஷனல் காட்சிகளைக் கூட கொஞ்சம் ஓவரா காமெடி செஞ்ச மாதிரி ஒரு ஃபீல்.
  • க்ளைமாக்ஸ்: படம் கொஞ்சம் அவசரமாக முடிந்தது போல் இருந்தது.

படத்தைப் பற்றிய அலசல்

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இருந்தாலும் தனக்கே உரிய நக்கல், நய்யாண்டி மற்றும் கவுண்டர் வசனங்கள் மூலம் சிரிப்பு வெடியை கொளுத்திப் போடுகிறார். அதே சமயம் எமோஷ்னல் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக வரும் லவ்லின், புல்லட் ஓட்டிக்கொண்டு வரும் 'ரக்கட் புரட்சிப் பெண்ணாக' மனதில் நிற்கிறார். "நீ என்னைய படிக்க வச்சுருக்க, என்னை நம்பி அனுப்பு அப்பா, இவன நம்பியா அனுப்பவ?" என்று அப்பாவிடமே சண்டை செய்து யோகிபாபுவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கும் காட்சிகள் பிரமாதம்.

படத்தின் மிகப்பெரிய பலமே நேட்டிவிட்டி தான். நகர்ந்துகொண்டே போகும் தாத்தா, தியாகி தாத்தா, ஊர் தலைவர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்ந்து இருக்கின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதியில் நீரோட்டம் பார்க்க ஊர் மக்களே செல்லும் காட்சி, தியேட்டரில் சிரிப்பு மழையை வரவழைக்கும்.

அரசாங்கம் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த படிமத்தை காக்க போராடுகிறது. ஆனால், தற்போது ஒரு சொட்டு தண்ணீருக்கே அவதிப்படும் மக்களின் வலியை சுரேஷ் சங்கையா நகைச்சுவை கலந்து பொட்டில் அடித்தார் போல் கூறியுள்ளார்.

ஆனால், இந்த படம் முழுவதுமே காமெடி களத்தில் செல்வதால், இரண்டாம் பாதியில் ஊர் மக்களே போலீஸாரிடம் அடிவாங்கும் காட்சி, அதையும் காமெடியாக காட்டியது ஏன்? என புரியவில்லை, அதனால் இவர்கள் வலியை ஆடியன்ஸுக்கு எப்படி கடத்துவது என்றே கேட்க தோன்றுகிறது. டெக்னிக்கலாக ஒளிப்பதிவு, நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசை பிரமாதம்.

👏 க்ளாப்ஸ்

நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு

சுவாரசியமான கதைக்களம்

நேர்த்தியான தொழில்நுட்ப பணிகள்

👎 பல்ப்ஸ்

வலியை முழுமையாகக் கடத்தாத இரண்டாம் பாதி

கொஞ்சம் படம் அவசரமாக முடித்தது போல் இருந்தது

CineTrendzTamil Rating: 3.5/5

"கண்டிப்பாக மக்கள் காண வேண்டிய ஒரு நேர்மையான படைப்பு!"

💬 நீங்க என்ன நினைக்கிறீங்க?

நீங்க இந்த 'கெணத்த காணோம்' படத்தை பாத்துட்டீங்களா? உங்களுக்கு யோகிபாபு காமெடி பிடிச்சிருந்ததா இல்ல படத்தோட கதை பிடிச்சிருந்ததா? மறக்காம கீழ கமெண்ட் பண்ணுங்க! 👇

Post a Comment

0 Comments