Stranger Things Season 5 Review Tamil | NetflixQA: Stranger Things 5 எப்படி இருக்கு?
Rating: ⭐⭐⭐✨ (3.25/5)
Language: English (Tamil Review)
Platform: Netflix
Genre: Sci-Fi, Horror, Thriller, Drama
Stranger Things 5 – ஒரு Decent Finale
Netflix-இன் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டாட வைத்த தொடர் என்றால் அது Stranger Things. அந்த தொடரின் கடைசி அத்தியாயமாக வெளியாகியுள்ள Stranger Things Season 5, ரசிகர்கள் மனதில் உருவான எதிர்பார்ப்புகளை பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளதா? அதற்கு பதில் – ஆம், ஆனால் சில குறைகளுடன்.
இந்த சீசன், தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட கதைக்கு ஒரு முடிவை கொடுக்கவே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதில் பெரிய அதிர்ச்சிகள் குறைவாக இருந்தாலும், உணர்ச்சிப் பூர்வமான தருணங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
முதல் 1 மணி 15 நிமிடங்கள் – Goosebumps Guaranteed
Stranger Things 5-ன் முதல் 1 மணி 15 நிமிடங்கள் முழுக்க முழுக்க Goosebumps Moment தான். Direction, Background Score, Visual Effects – மூன்றுமே ஒன்றாக சேர்ந்து ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கின்றன.
குறிப்பாக Vecna மற்றும் Mind Flayer இருவரும் இணைந்து செயல்படும் காட்சிகள், இந்த சீசனின் முக்கிய ஹைலைட். இருவருக்கும் இடையிலான சக்தி மோதல்கள், Upside Down உலகின் விஸ்தரிப்பு – எல்லாமே கண் முன்னே ஒரு பெரிய திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தருகிறது.
இந்த பகுதியில் Horror Elements கூடுதலாக பயன்படுத்தப்பட்டிருப்பது, Stranger Things-ன் பழைய ரசிகர்களுக்கு ஒரு Nostalgic Feel-ஐ கொடுக்கிறது.
Visuals & VFX – Netflix Quality Confirm
Visual Effects-ல் Stranger Things 5 Netflix-ன் Top-Tier Production என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. Upside Down உலகம் இந்த சீசனில் இன்னும் Dark-ஆவும், Detail-ஆவும் காட்டப்படுகிறது.
Lighting, Creature Design, Set Work – எல்லாமே Big Budget Series-க்கு ஏற்ற வகையில் இருக்கிறது. Vecna Character-க்கு கொடுக்கப்பட்ட Visual Treatment, இந்த சீசனில் இன்னும் Powerful-ஆ தெரிகிறது.
கடைசி 1 மணி நேரம் – Emotion Overdose
தொடரின் கடைசி 1 மணி நேரம் முழுக்க முழுக்க Emotional Sequences தான். Characters-க்கு கொடுக்கப்படும் Closure, அவர்களுக்குள் உள்ள Relationship, Friendship, Sacrifice – எல்லாமே மனதைத் தொட்டாலும்,
ஒரு கட்டத்திற்கு மேல் இந்த Emotional Stretch சற்று நீளமாக இழுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் ரசிகர்களுக்கு “போதும்டா சாமி” என்று தோன்றும் அளவிற்கு சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.
Editing இன்னும் Tight-ஆ இருந்திருந்தால், இந்த Finale இன்னும் Powerful-ஆ மாறியிருக்கும்.
Performances – Cast அனைவரும் Strong
Stranger Things-ன் மிகப்பெரிய பலமே அதன் Cast. இந்த சீசனிலும் அதில் எந்தக் குறையும் இல்லை.
Eleven Character-க்கு கொடுக்கப்பட்ட Emotional Arc, இந்த சீசனின் Heart. அதேபோல் மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட Space-ஐ முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
Supporting Characters கூட இந்த Finale-ல் மறக்க முடியாத தருணங்களை உருவாக்குகிறார்கள்.
Climax Twist – Simple but Effective
Season 5-ன் Climax-ல் வரும் ஒரு சிறிய Twist, பெரிய Shock இல்லையென்றாலும், Story-க்கு ஒரு அழகான Full Stop வைக்கிறது.
அது Stranger Things Universe-க்கு முடிவு என்றாலும், ரசிகர்கள் மனதில் அந்த உலகம் எப்போதும் உயிருடன் இருக்கும் மாதிரி ஒரு Feel-ஐ கொடுக்கிறது.
Minus Points
- கடைசி பகுதி சற்று அதிகமாக நீளுகிறது
- Major Twist-கள் குறைவாக இருக்கிறது
- Pacing சில இடங்களில் Sluggish
Plus Points
- First Half – Pure Goosebumps
- Vecna & Mind Flayer Sequences 🔥
- Strong Emotional Connect
- High-Quality VFX & BGM
Final Verdict – Stranger Things 5 பார்க்கலாமா?
Stranger Things Season 5 ஒரு Perfect Finale இல்லையென்றாலும், ஒரு Decent & Satisfying End என்றே சொல்லலாம்.
ரொம்ப பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், Story-யின் Closure-க்காக பார்க்கிறவர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்.
Stranger Things ரசிகர்களுக்கு இது Must Watch.
Casual Viewers-க்கு – Decent One-Time Watch.
Overall Rating: ⭐⭐⭐✨ (3.25/5)
0 Comments