BREAKING NEWS
Loading latest updates...

The Family Man 3 Review in Tamil | ஃபேமிலி மேன் 3 விமர்சனம் | Prime Video Series Review

The Family Man 3 Review: ஃபேமிலி மேன் 3 எப்படி இருக்கு? பார்க்க வொர்த்தா இல்லையா?

Amazon Prime Video-வில் (நவம்பர் 21) முதல் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கும் The Family Man Season 3 பற்றி பேசணும்னா, ஒரு நேரடியான வார்த்தை – “இது ரொம்பநேரம் காத்திருந்த எதிர்பார்ப்புக்கு exact-ஆன justice கொடுத்திருக்காங்க.” முதல் இரண்டு சீசன்களைப் போலவே இந்த சீசனும் அரசியல், எமோஷன், குடும்பம், விறுவிறுப்பு, action – எல்லாத்தையும் ஒரு நல்ல balance-ல mix பன்னி solid-ஆ serve பண்ணிருக்கு.

ரஜ் & டிகே, சுமன் குமார், துஷார் சேத் ஆகியோர் இணைந்து direction handle பன்னிருக்காங்க. இந்த குழுவின் USP – “relatable-அன characters உடன் national-level threat stories.” அந்த formula இந்த சீசனிலும் work ஆகுது.

முக்கிய நடிகர்கள்

  • மனோஜ் பாஜ்பாய் – Srikant Tiwari
  • பிரியாமணி – Suchi
  • ஷரிப் ஹாஷ்மி – JK
  • ஸ்ரேயா தன்வந்திரி – Zoya
  • நிம்ரத் கவுர் – PM Basu
  • ஜெய்தீப் அஹ்லாவத் – New antagonist

இசை: கேதன் சோதா ஒளிப்பதிவு: ஜெய் சரோளா

கதையின் மையம் – சீனா, வடகிழக்கு, உளவு, அரசு, மற்றும் ஸ்ரீகாந்த் ‘லுக்கா’

Season 3-னு announcement வந்ததிலிருந்தே ஒரு doubt – “இந்த முறை என்ன தான் threat இருக்கு?” இந்த சீசனோ அந்த கேள்விக்கே answer.

கதை post-Covid timeline-ல் நடக்குது. இந்திய அரசு சீனாவின் பல app-களை ban பண்ணும் நேரம். ஆனால் அதற்குப் பின்னால ஒரு பெரிய காரணம் இருக்கு — சீனா இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் நுழைய புதிய கிராமங்களை set up பண்ணுது. அந்த முயற்சியை ஆதரிக்க சில இந்திய anti-national அமைப்புகளையும் சீனா bankroll பன்னுது.

இந்த infiltration-ஐ புரிஞ்சுக்கிட்ட இந்திய அரசு அந்த entire sector-ஐ high alert-ல வைக்குது. இதெல்லாம் நடக்குற சமயம், லண்டன்ல இருந்தே சீனா சில key agents-ஐ இந்தியாவுக்குக் குழப்பம் உண்டாக்க move பண்ணுது. அந்த பெரிய conspiracy-ல சிக்கிப்போறது Srikant Tiwari.

இந்த முறை ஒரு “external threat + internal betrayal” model-ல story run ஆகுது. ஸ்ரீகாந்த்-ஐ eliminate பண்ணுறதுக்காக சில mercenaries கூட hire பண்ணப்படுறது. இதையெல்லாம் எப்படி crack பண்ணுறார், எத்தனை தியாகங்கள் நடக்குது, அதான் மூலக்கதை.

7 எபிசோடுகள் – ஒரு solid thriller ride

மொத்தம் ஏழு எபிசோடுகள் தான். ஒவ்வொரு episode-மும் 45 minutes இருந்து 60 minutes வரை இருக்கும். ஆனால் ஒரு scene கூட bore feel ஆகாது – இதுதான் இந்த சீசனின் biggest strength.

முதல் episode தொடங்கும்போதே story jump possible ஆகிவிடுது. இப்படி நிறைய Indian web series-ல் “3 episodes warm-up” இருக்கும். ஆனால் Family Man 3 அதைப் பின்பற்றவே இல்லை. First 15 minutes குள்ளே tension build ஆகிவிடும்.

ஒவ்வொரு episode முடியும் நேரமும், “அடுத்தது open பண்ணலாமா இல்லேனா ஒரு coffee குடிச்சுட்டு வரலாமா?” என்று literally confusion வரும் அளவுக்கு cliffhanger கொடுத்திருக்காங்க.

நடிப்பு – மனோஜ் பாஜ்பாய் மீண்டும் once-in-a-generation acting

மனோஜ் பாஜ்பாய் பற்றி தனி paragraph வைக்கணும். ஏன்னா இந்த சீசனில் அவர் performance literally textbook example மாதிரி. அவர் ஒரு spy மட்டுமல்ல… ஒரு சோர்ந்த middle-class father, control இல்லாத kids-க்கு appa, confused husband, angry officer – எல்லாம் mix பன்னி ஒரு real human character-ஆ build பண்ணிருக்கார்.

பிரியாமணி இந்த சீசனில் கொஞ்சம் முக்கியத்துவம் அதிகமாகத்தான் கிடைக்கிறது. அவரின் portions சிலவரை slow-ஆ feel ஆகலாம், ஆனா overall ல் storyக்கு importance இருக்கு.

JK (Sharib Hashmi) – comedy timing + loyalty + emotional depth. இவர்இல்லாமல் Family Man complete இல்லை.

ஜெய்தீப் அஹ்லாவத் — screenல் வந்தவுடனே vibe மாறிடும். Perfect antagonist casting.

Background score – tension scenes-க்கு exact compliment. ஒரு web seriesக்கு தேவையான engaging BGM என்னனு textbook example.

Weak Points – இப்படியும் இருக்குதேன்னு தோன்றியவைகள்

  • Family scenes சில இடங்களில் கொஞ்சம் நீளமாகிறது. அந்த portions skip பண்ணணும்னு நினைக்க வைக்காது, ஆனா வேகம் குறைவு.
  • Final episode-க்கான build-up strong. ஆனா இடைக்கிடை political explanations நீளமா feel ஆகலாம்.

இந்த minor flaws இருக்குறதுக்கு பாத்தாலும் overall presentation பத்தி major complaint ஒன்றும் சொல்ல முடியாது.

Worth it? 100% YES!

Family Man 3 ஒரு complete balanced season.

  • Thriller ✔️
  • Spy elements ✔️
  • National threat angle ✔️
  • Manoj Bajpayee’s acting ✔️✔️✔️
  • Engaging writing ✔️
  • Superb cinematography ✔️

இந்த சீசன், சீரியஸான கதையையும் mass entertainment-யையும் mix பண்ணி கொடுத்திருக்கும் perfect example. binge-worthiness இருக்கா? YES. Worth your weekend? Definitely YES.

🌟 My Rating: 4/5

Spy thrillers விரும்புறவர்களுக்கெல்லாம் இந்த சீசன் ஒரு must-watch!

Post a Comment

0 Comments